பெண்கள்
முன்னுரை :
உலகில் பல்வேறு சாதனைகள் அரங்கேறிக்
கொண்டு தான் இருக்கின்றன. அதில் குறிப்பாக
அடுப்படியில் முடக்கப்பட்ட பெண்கள் வெளியே வந்து படைக்கும் சாதனைகள் பல. குடும்பம், சமூகம், கட்டுப்பாடு, கலாச்சாரம்
என்பவற்றை தாண்டி பெண்களால் செய்யப்படும் இவ்வாறான சாதனைகள் தொடர்பில் நாம்
அறிந்து வைத்திருப்பது அவசியமாகும். இதோ
இவற்றில் சிலவற்றை இக்கட்டுரையில் காண்போம்.
பெண் என்பவள் யார்?
"மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும்" என்று பாடியுள்ளார் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை. ஆனால் மாதவம் புரிந்து பிறந்துள்ள
பெண்கள் பலரும் இன்றைய சமூகத்தில் பெரும்பாலும் சமமாகவும், மரியாதையுடனும் நடத்தப்படுவதில்லை. ஆனாலும் தைரியத்தையும், நம்பிக்கையையும் ஆயுதமாக
கொண்ட பெண்கள் இந்திய வரலாற்றில் வியக்க வைக்கும் பல்வேறு செயல்களை புரிந்துள்ளனர்.
அவர்கள் தொடங்கி வைத்தது தான் இன்று பெண்கள் பல்வேறு துறைகளில் கால் பதிக்க உதவி புரிந்துள்ளது.
சங்ககாலத்தில் பெண்கள்:
பழங்காலத்தில் பெண்கள் பல இன்னல்களுக்கு ஆளாக்கப் பட்டிருக்கிறனர். உடன் கட்டை ஏறுதல், பெண்கல்வி மறுப்பு, கைம்பெண்களுக்கு
முடி இயக்குதல், குழந்தை
திருமணம் போன்ற பல மூடநம்பிக்கைகளுக்கு ஆளாக்கப் பட்டிருந்தனர்.
பெண்களை வீட்டுப்படி தாண்டவிடாத இந்தச் சமூகம் இன்று விண்ணில் வெற்றிக்
கொடிநட்டு, ஆண்களைவிட அதிக நாட்கள் விண்ணில் தங்கிக்காட்டுகிற அளவுக்கு
மனோதைரியத்தையும், விடாமுயற்சியையும், நினைத்ததைச் சாதிக்கின்ற வல்லமையும் ,
உடல்வலிமையும் வாய்த்திருக்கிறது என்பதை நினைத்தால் மனதில் பெருமை பொங்குகிறது.
பெண்ணியம்:
வீட்டுக்குள்ளே பூட்டிக்கிடந்த பெண் சமுதாயம், இன்று விண்ணில் பறந்து
சாதனை படைக்கும் அளவுக்கு முன்னேறி இருக்கிறது. தாயாக, மகளாக, மனைவியாக, சகோதரியாக,
தோழியாக, வழிகாட்டியாக, நலம் விரும்பியாக பல்வேறு உயிரோட்ட உணர்ச்சிகளின் கலவை பெண்.
அடுத்தவர்களுக்காகவே அர்ப்பணிப்பு உணர்வோடு வாழ பிறந்த அவதாரம் பெண். இவ்வாறு சாதனை
உயரத்தை எட்டி உள்ளனர்.
பெண்களின் மகத்துவம்:
''தொட்டிலை ஆட்டும் கை
தொல்லுலகை ஆளுங்கை'' என்பதை உலகுக்கு காட்டும் வழியில் பெண்கள் இன்று
செயல்பட்டு வருகிறார்கள். பெண்கள் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என்பதை நன்கறிந்து
வளர்ச்சி பணியில் ஈடுபட்டு தாங்களும் வாழ்ந்து பிறரும் வாழ வழி செய்கிறார்கள். முன்னேற்ற
பாதையில் முனைந்து சென்று நாடு உயர, மேன்மையுற தங்களை அர்ப்பணிக்கின்றனர்.
பெண்களின் சிறப்பு:
'இல்லாள்
இல்லாத இல்லம் பாழ்' என்ற சில அறிஞர்களும்.
'உலகம்
என்னும் ஓவியம் பெண்ணினால் எழில் பெறுகிறது'என்று உலக மகா கவி அல்லாமா இக்பாலும்
'தாயின்
பாதத்தடியில் தான் சேயின் சொர்க்கமிருக்கிறது'
என முஹம்மது நபி அவர்களும் பெண்ணின் பெருமையை
பெருமையாகவே கூறியுள்ளார்கள்.
பெண் உரிமை:
பெண்களுக்கு 33 சதவீதம் விழுக்காடு
வழங்கினாலும் 50 சதவீதப் பெண்ணுரிமை வழங்குவதே
பெரும்பாலுமான கருத்தாக இருக்கிறது.
கல்வி , வேலை வாய்ப்பு , சுயதொழில் போன்ற பல்வேறு துறைகளில் சமமான
முன்னுரிமை வழங்குவதே உண்மையான பெண்ணுரிமை ஆகும்.
சுதந்திரம் என்பது யாது?
"இரவில் எப்போது ஒரு பெண் தனியாக நடந்து செல்ல முடிகிறதோ அன்றுதான் உண்மையான
சுதந்திரம்"என்றார் மகாத்மா காந்தி. இதோ, இந்திய சுதந்திரம்
பெற்று 73 ஆண்டுகள் கடந்துவிட்டன.
இந்திய விடுதலைப் போரில் எண்ணற்ற பெண்கள் அளப்பரிய தியாங்களைச் செய்தனர். நாம்
சுவாசிக்கும் சுதந்திரக் காற்று, பெண்களின் போராட்ட பங்களிப்பினாலும் அறுவடையான
அற்புதம். அதேநேரம், 73ஆண்டு சுதந்திரப் பயணத்தில் முழுமையான முன்னேற்றத்தைப் பெண்கள்
இன்னும் அடையவில்லை என்பதே எமது கருத்து.
சமுதாய வளர்ச்சியில் பெண்கள்:
மகளிருக்கு அதிக மரியாதை வழங்கும் சமுதாயம் தமிழ் சமுதாயம். பெண்களை கடவுளுக்கு மேலாக வைத்து வழிபடுவதும் தமிழ்
சமுதாயமே. நாட்டின் சமுதாய
வளர்ச்சிக்கு பெண்கள் பெறும்
பங்காற்றியுள்ளனர்.
இந்த 21 -ம் நூற்றாண்டில், இந்தியா பல முனைகளிலும் முன்னேற்றமடைந்து விட்டது,
விரைவில் இந்திய தேசம் பெரிய வல்லரசாகி விடும் இந்நேரத்தில், பெண்களின் நிலை என்ன
என்பது கூர்ந்து ஆராயப்பட வேண்டிய ஒன்று.
சமீபத்தில் டிரஸ்ட் லா(Trust Law) என்ற உலகம் தழுவிய பெண்களுக்கான தொண்டு
நிறுவனம் ஒன்று நடத்திய கணிப்பில் ஒட்டு மொத்த உலகில் பெண்களுக்கு பாதுகாப்பு
இல்லாத நாடுகளின் வரிசையில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது என அறிவித்துள்ளது.
பெண்களின் சமுதாய வளர்ச்சிக்கு முதன்மையான பாதுகாப்பை முழுமையாக வழங்கினாலே
சமுதாயம் மேம்படும்.
பெண்களின் சில முக்கிய இயக்கங்கள்:
சிப்கோ இயக்கம்: கௌரா தேவி என்பவர் மரத்தை வெட்டுவதற்கு குறல் கொடுக்கும் வகையில் மரங்களை அனைத்தப்படி நின்றனர்.
வெள்ளையனே வெளியேறு இயக்கம்:
1.
அஞ்சலை அம்மாள் என்பவர்- உப்பு காய்ச்சும் போராட்டம், நீலன் சிலை அகற்றும் போராட்டம், தனியாள்
அறம் போராட்டம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் போன்ற பல்வேறு போராட்டத்திற்கு குறல்
கொடுத்தார். பலப்போராட்டத்திற்காக
சிறைவாசம் அனுபவித்தார். தன் சொத்துக்கள்
அனைத்தையும் விற்று விடுதலைப் போராட்டத்திற்காக செலவு செய்தார். இவரைக்
காந்தியடிகள் " தென்னாட்டு
ஜான்சிராணி "என்று அழைக்கப்பட்டார்.
2.
உஷா மேத்தா என்பவர் சைமன் கமிஷனை எதிர்த்து நடந்த போராட்டத்தில் "சைமன்
வெளியே போ" என்று முழக்கம் எழுப்பியபோது இவர் வயது எட்டு.
எதிர்
காலத்தில் பெண்களின் நிலைப்பு:
வருங்காலங்களில் தன் நிலைகளை மேம்படுத்தப் பெண்களுக்கு சிறந்த கல்வியை வழங்க
வேண்டும். பெண்கள் தன் வாழ்க்கையின்
ஒவ்வொரு முடிவுகளையும் தானாக எடுக்கும் சுதந்திரம் அளிக்க வேண்டும். பெண்களின் கருத்து மற்றும் ஆளுமைத்திறனை இல்லம்
முதல் பாராளுமன்றம் வரை பறை சாற்ற வேண்டும்.
முடிவுரை:
‘ஆணுக்கு இங்கு பெண் இளைத்தவறில்லை’ என்பதை இந்தப் போட்டி உலகில் கண்டோம். இன்னும் அவ்வையார், காரைக்கால் அம்மையார் , வேலு
நாச்சியார், சரோஜினி நாயுடு , செல்வி ஜெயலலிதா, கிரண் பேடி, முத்துலட்சுமி ரெட்டி, அன்னை தெரேசா, கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் போன்ற எத்தனையோ பெரும் ஆளுமைகள் இன்னமும் இந்த சமூகத்திற்கு பெரும்
ஊக்க சக்திகளாகவும், ஏனைய பெண்களுக்கு ஆகச்சிறந்த கிரியா ஊக்கிகளாகவும் இருந்து வழிநடத்திவருகிறார்கள்.
இப்படிக்கு,
ஜேப்பியார் பொறியியல் கல்லூரி மாணவி,
அ.தீபனா( உயிரித் தொழில்நுட்பம் பொறியாளர்)

0 Comments